சித்திரை திருவிழாவையோட்டி பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
சித்திரை திருவிழாவையோட்டி பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். அதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இந்நிலையில் கொரோனா வைரஸால் கடந்த ஆண்டு இந்த விழா கோயிலுக்குள் நடைபெற்றது. இந்தாண்டாவது இந்த திருவிழா வழக்கம் போல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டும் கள்ளழகர் வைகைக்கு பதில் கோயிலுக்குள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து மதுரை மேலூர் அருகே அழகர் கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். கோயிலில் அமைக்கப்பட்ட தொட்டியில் புனித வைகை ஆற்றின் தண்ணீரை நிரப்பி விழா நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையை சூடிக்கொண்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்.