விவாகத்தடை போக்கும் வீர ஆஞ்சநேயர்..!

விவாகத்தடை போக்கும் வீர ஆஞ்சநேயர்..!

விவாகத்தடை போக்கும் ஆஞ்சநேயர் கோயில் தமிழகத்தில் அமைந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், அஞ்சநேயர் கோயில்களில் மிக சிறந்த தலங்களில் ஒன்று. 

கொங்கு நாட்டில் புகழ்பெற்ற சில ஸ்தலமான கருணாம்பிகை சமேத அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு வடபுறத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

இந்த கோயிலுக்கு வந்து வேண்டும் பக்தர்களின் சகல வேண்டுதல்களுக்கும் விரைவில் பலன் கிடைக்கிறதாம். அதிலும் குறிப்பாக விவாகத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டினால் திருமணம் விரைவில் நடைபெறுகிறதாம்.

மேலும் மஞ்சள் பையில் கொப்பரை மட்டைத் தேங்காய், வெற்றிலை பாக்கு மற்றும் தட்சணை ஆகியவற்றை வைத்து பூஜித்து கோயிலில் குறிப்பிட்ட இடத்தில் கட்டி வைத்து ஆஞ்சநேயரைத் தொழுது வந்தால் விரைவில் தடை நீங்கி திருமணம் நிறைவேறுகின்றதாம். இதனை தேங்காய்ப் பரிகாரம் எனக் கூறுகின்றனர்.

அத்துடன் 12 சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றிதான்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்