ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து

ஆஞ்சநேயர்  பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து

ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஞ்சநேயர் கர்நாடக மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள ஏழுமலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக ஒரு புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்று கல்வியாளர்களும் மறுத்துள்ளனர். 

ஹம்பி பகுதியில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்கள் முடிவை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்