வேகமெடுக்கும் கொரோனா: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை குறைப்பு: ஷாக்கில் பக்தர்கள்

வேகமெடுக்கும் கொரோனா: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை குறைப்பு: ஷாக்கில் பக்தர்கள்
ஆந்திராவில் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சில நிபந்தனைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று மாலை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில்தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “கொரோனா தொற்று பரவுவதால்,பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனி இலவச தரிசன டோக்கன்களை குறைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தினசரி 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இது இனி 15 ஆயிரமாக குறைக்கப்படும். அன்ன பிரசாத மையம், விடுதிகள் வழங்கும் மையங்கள் அருகே தெர்மல் பரிசோதனை செய்யப்படும்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் இனி கண்டிப்பாக முக கவசங்கள் மற்றும் கைகளை சுத்தம் செய்துக்கொள்ள கிருமி நாசினி போன்றவற்றை கொண்டு வர வேண்டும்.

 திருமலையில் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்