பண்ணாரி அம்மன் குண்டம் விழா : பூசாரி உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர்!

பண்ணாரி அம்மன் குண்டம் விழா : பூசாரி உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர்!

உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவில் கொரோனா காரணமாக தலைமை பூசாரி உட்பட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறும் எனவும் இதில் 3 பூசாரி உட்பட்ட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை எனவும் அறநிலைதுறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.

பின்னர் அதிகாலை 4 மணி அளவில் தாரை தப்பட்டைகள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்திற்கு அழைத்து வந்தனர். 

குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றியும் பூக்களைத் தூவியும் பூஜைகள் செய்யப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் உட்பட 10 பேர் குண்டம் இறங்கினார்கள்.

இந்த ஆண்டு குண்டம் இறங்க பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படாத நிலையில் பண்ணாரி அம்மனை தரிசிக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

பல வருடங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழாவில் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்படாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்