கொரோனா அச்சுறுத்தல்: ஹரித்வாரில் ஒரு மாதம் மட்டுமே 'கும்பமேளா' திருவிழா

கொரோனா அச்சுறுத்தல்: ஹரித்வாரில் ஒரு மாதம் மட்டுமே 'கும்பமேளா' திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹரித்வாரில் முதல் முறையாக, கும்பமேளா திருவிழா ஒரு மாதம் மட்டுமே நடைபெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மஹா கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்த திருவிழா கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், இம்முறை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கும்பமேளா விழாவை ஹரித்வாரில் ஒரு மாதம் மட்டுமே கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் இந்த கும்பமேளா கொண்டாடம் ஏப்ரல் 30ம் தேதி வரை ஒரு மாதம் மட்டுமே நடைபெறவுள்ளது.ஒரு மாதம் மட்டும் கும்பமேளா கொண்டாடம் நடைபெறவுள்ளது இதுவே முதன்முறை. 

இந்நிலையில், பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, கொரோனா வைரசால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழை காண்பித்தால் மட்டுமே, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்