30 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்.!

ஆசியாவின் பிரம்மாண்டமான தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகச் சொல்லப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் இன்று நடக்கிறது.
அதையொட்டி நேற்று மாலை தியாகராஜர் ஆழித் தேரில் எழுந்தருளினார். இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அதிகாலை5 மணி அளவில் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து 7:30 மணி அளவில் ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக ஆழித் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
சென்னை சூப்பர் கிங்ஸ்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

கோயமுத்தூரில் நடந்த திருவிளக்கு பூஜை!


வேலூரில் கோலாகலமாக திருவிளக்கு பூஜை


மதுரையில் கோலாகலமாக திருவிளக்கு பூஜை
