திருப்பதியில் பக்தர்கள் அனுமதி ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதியில் பக்தர்கள் அனுமதி ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர்.முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது திருப்பதி கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தற்போது 50,000 பக்தர்கள் வரை திருப்பதி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் கொரேனா இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், திருப்பதியில் (TTD) இன்று முதல் (25.03.21) வரும் 28ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதியில் தெப்ப உற்சவம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், திருமலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக நேற்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருமலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்