திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து...

திருப்பதியில்பக்தர்களுக்கு அனுமதி ரத்து...

திருப்பதியில் புஷ்கரணி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளதால் இன்று முதல் வரும் 28-ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரேனா 2-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். 

இதனால் திருமலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை திருப்பதி சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் கொரோனா பரவல் காரணமாக திருமலையில் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்