ஏப்ரல் மாதத்தில் திருப்பதி தரிசனம் மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவு விபரம்..!

ஏப்ரல் மாதத்தில் திருப்பதி தரிசனம் மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவு விபரம்..!

ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி காலை 9 மணிக்கு கட்டண தரிசனம் மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவு செய்ய இணையதளத்திலேயே வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளைப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருமலை திருப்பதி சுவாமி வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் தங்கும் விடுதி முன்பதிவு செய்வதற்கான அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதன்படி கோயிலுக்கு வரக்கூடிய அனைத்து பக்தர்களும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும். கோயில் வளாகத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என கொரோனா தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்ய மற்றும் தங்கும் விடுதியை முன்பதிவு இணையதளத்தில் செய்வதற்கான வசதியை இன்று (மார்ச் 20) காலை 9 மணி முதல் திருப்பதி இணையதளத்தில் செய்ய முடியும்.

https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login - என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதில் கேட்கப்படும் விபரங்களைப் பதிவு செய்யவும்.

மார்ச் 2021 மாதத்திற்கான சுவாமி தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு முன்பதிவு கடந்த பிப்ரவரி 20ல் வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்