திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்..!

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் வரும் மார்ச் 31ல் நடக்கிறது.

இக்கோயிலில் நேற்று முன் தினம் இரவு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. 

தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் திருவிழா கொடியேற்றினர். 

கொடிகம்ப அடிப்பகுதியில் திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. 

ஏப்ரல் 2 வரை காலை மற்றும் இரவு சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். 

முக்கிய நிகழ்ச்சிகள்

மார்ச் 24 இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி மார்ச் 25 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை

மார்ச் 26 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு

மார்ச் 27ல் பச்சை குதிரை ஓட்டம்

மார்ச் 28ல் பங்குனி உத்திரம்

மார்ச் 29ல் சூரசம்ஹார லீலை 

மார்ச் 30 பட்டாபிஷேகம்

மார்ச் 31ல் திருக்கல்யாணம்

ஏப்ரல் 1 தேரோட்டம், 

ஏப்ரல் 2ல் தீர்த்த உற்சஸவம்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்