5 லட்சம் ருத்ராட்சங்களால் உருவாகப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம்..!

5 லட்சம் ருத்ராட்சங்களால் உருவாகப்பட்ட 11 அடி உயர சிவலிங்கம்..!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்கள் கொண்டு 11 அடி உயர சிவலிங்கம் உருவக்கப்பட்டது.

அதன் அருகில் தமிழகத்திலேயே முதன் முறையாக 5,001 பான லிங்கங்கள், 1,008 நர்மதா பாண லிங்கங்கள், 108 மரகத லிங்கங்கள் இடம்பெற்று இருந்தன. அத்துடன் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மாணிக்க விநாயகர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள மரகத லட்சுமி, ரூ.6 லட்சம் மதிப்புள்ள 18 முக ருத்ராட்சம் போன்ற அரிய பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இதில் 30 வேத விற்பனர்கள் ருத்ர பாராயணம் உள்ளிட்ட சிவபூஜைகளை செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பன்னிரு திருமுறை பாராயணம், கைலாய வாத்திய நிகழ்ச்சி உள்ளிட்டவைகளும் நடந்தது.

இந்த கண்காட்சி வரும் 15-ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்