திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது!!

திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று(பிப்ரவரி 19) நடைபெற்றது.
திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில், செடல் திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி மாலை சக்தி கரகம் கொண்டு வரப்பட்டு 11ம் தேதி காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
இதனை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் செடலணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 20) மஞ்சள் நீர் உற்சவம், இரவு மடிபால் உற்சவம் நடக்கிறது. வரும் 26ம் தேதி உதிர வாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை