பழனி மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா…

பழனி மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா…

பழனியில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.

பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை மாசித் திருவிழா நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பழனி தேக்கம் தோட்டம் எல்லை கருப்பசாமி கோயில் அருகே மரத்தில் கம்பம் வெட்டி தயார் செய்து எடுத்து சென்றனர்.

சிறப்பு பூஜைக்கு பின் நள்ளிரவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் கோயில் முன் நடப்பட்டது. கம்பத்திற்கு பால் தீர்த்தம் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2-ம் தேதி திருக்கல்யாணம், அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருதல், மார்ச் 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தினமும் தங்க குதிரை, வெள்ளி யானை, வெள்ளி காமதேனு வாகனங்களில் மாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்