இந்த பரிகாரத்தை பண்ணுங்க பிரிந்த கணவன் மனைவி கூட சீக்கிரம் சேர்ந்துவிடுவர்.

இந்த பரிகாரத்தை பண்ணுங்க பிரிந்த கணவன் மனைவி கூட சீக்கிரம் சேர்ந்துவிடுவர்.

இந்த பரிகாரத்தை பண்ணுங்க
பிரிந்த கணவன் மனைவி கூட சீக்கிரம் சேர்ந்துவிடுவர்.



சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. எடுத்ததும் டைவர்ஸ் வரை
யோசிக்கின்றனர். இப்போது சொல்லப் போகும் பரிகாரத்தை செய்து பாருங்கள்.
பிரிந்தவர்கள் கூட சீக்கிரத்தில் சேர்ந்துவிடுவர். இந்த பரிகாரத்திற்கு தேவை 2 வெற்றிலைகளும், கொஞ்சம் சுத்தமான பசு நெய். அப்படி கிடைக்கவில்லை என்றால், சாதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கும் நெய்யை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் ஒரு வெற்றிலையில் பேனாவினால் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். அதில் நெய்யை உங்கள் விரலில் தொட்டு, அந்த வெற்றிலை முழுவதிலும் தேய்த்து விடுங்கள். பெயர் கொஞ்சமாக அழிந்தாலும் பரவாயில்லை.
இப்போது ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலையை வைத்து சுருட்டி விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும், ஒரு வெற்றிலையின் மேல் சாஸ்திரப்படி, மற்றொரு வெற்றிலையை கவிழ்த்து வைக்க கூடாது.  சாமி கும்பிடும்போது ஒரு வெற்றிலைக்கு மேலே மற்றொரு வெற்றிலை வைப்போமே
அப்படி வையுங்கள். அதை சுருட்டி, ஒரு கயிறால் அந்த வெற்றிலையை கட்டி விட வேண்டும். வெற்றிலை பிரியாத அளவிற்கு கட்டிவிடுங்கள். இப்போது, இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். 21 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 21 நாட்களுக்குள் இடையே டப்பாவை திறக்க வேண்டாம். விரிசல் விழுந்த கணவன் மனைவி மனதிற்குள், நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒருமுறை செய்தும் பலன் இல்லையா? பழைய வெற்றிலையை, கால் படாமல் தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிதாக வெற்றிலையை எடுத்து, இதேபோல் பரிகாரத்தை செய்து டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். அதிகபட்சம் 3 முறை இந்த பரிகாரத்தை செய்தால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்