தொடர்ந்து சிலருக்கு கெட்ட நிகழ்வுகள் நடக்க இதுவும் காரணமாக இருக்கலாம்

தொடர்ந்து சிலருக்கு கெட்ட நிகழ்வுகள் நடக்க இதுவும் காரணமாக இருக்கலாம்

தொடர்ந்து சிலருக்கு கெட்ட
நிகழ்வுகள் நடக்க இதுவும் காரணமாக இருக்கலாம்நாம் நல்வாழ்விற்காக என்ன தான்
இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும்
சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில
மாற்றங்களை செய்தால் நன்மைகள் தேடி வரும்.

·        

வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல. வீட்டின் முன்
பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியைப் பாதிக்கும்.

·        

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய், பிசாசு
போன்ற துர்சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். எனவே, இது போன்ற
பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி
மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட்டால் பாதிப்புகள்
தீரும்.

·        

வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும்
நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து
ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால்
ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

·        

கோவில் கொடி, கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின்
மேல் படியக் கூடாது. இதனால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால்
பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது
ப்ருத்வி தோஷங்களில் ஒன்று. இதற்கு பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து
விபூதி அணிந்து வர நன்று.

 

 

 

 

 

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்