ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

நீடாமங்கலம் அருகே திருவோண மங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்களமாருதி ஆஞ்சனேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரீசித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்களமாருதி ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், மார்கழி அமாவாசை மூலம் நட்சத்திரம் கூடிய திருநாளில் இன்று (ஜன.12) அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள், 33 அடி உயர ஆஞ்சனேயர் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், 10,500 வடைகளால் செய்யப்பட்ட வடைமாலை ஆஞ்சனேய சுவாமிக்கு சாற்றப்பட்டதுடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆஞ்சனேய சுவாமிக்கு நடைபெற்ற லட்சார்ச்சனையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயரை தரிசித்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு