வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்: சமேதராக வரதராஜ பெருமாள்

வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்: சமேதராக வரதராஜ பெருமாள்

அல்லாளபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் பக்தியுடனும் பரவசத்துடனும் கண்டு மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடந்த கணபதி, தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், மற்றும் நவகிரக ஹோமங்களுடன் திருக்கல்யாண உற்சவ விழா தொடங்கியது.

இந்த விழாவில் புடவை, வேஷ்டி, வளையல், இனிப்பு, பழங்கள், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு சீர் வரிசைகள் எடுத்து வரப்பட்டன. இதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், மாங்கல்யம் கட்டுதல் உள்ளிட்ட சேவைகளுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்