நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1, 00,008 வடைமாலை அலங்காரம்…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு இன்று அதிகாலை ஒரு லட்சத்து 08 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் அஞ்சனேயர் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் அஞ்சனேய ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் அஞ்சனேய ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 08 எண்ணிக்கையிலான வடைமாலை சுவாமிக்கு சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.4% -
அனுபவக் குறைவு
24.39% -
கிரிக்கெட் அரசியல்
35.54% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.67%