முருகப் பெருமானின் புகழ் பெற்ற தலம்!

முருகப் பெருமானின் புகழ் பெற்ற தலம்!

முருகப் பெருமானின் புகழ் பெற்ற
தலம்!

முருக பெருமானின்
புகழ் பெற்ற கோவில்கள் என்றால் அறுபடை வீடு தான். அதற்கடுத்து தென்னிந்தியாவில்
கர்நாடாகவில் பல புகழ்பெற்ற முருகர் கோவில்கள் உண்டு. அதில் மிகவும் பிரசித்தி
பெற்றது. குக்கே சுப்ரமணியர் ஆலயம். முருகரை கர்நாடாகவில் சுப்ரமணியா என அழைப்பது
வழக்கம்.
பசுமையான சூழலில், மிகவும் எழிலான குமர பர்வதம் எனும் மலையின்
மடியில் இந்த கோவில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. ஏராளமான பக்தர்கள் இங்கே
முருகனை தரிசிக்க குவிகின்றனர். கோவிலுக்கு பின் பாய்ந்தோடும் குமரதாரா நதி இந்த
கோவிலின் அழகை மென்மேலும் கூட்டுவதாய் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு ஐந்தாயிரம்
ஆண்டு பழமையானது. இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் சுப்ரமணியரின் அம்சம்
நிறைந்திருப்பதாக ஞானியர் சொல்கின்றனர். இந்து மரபில் முக்கிய கோவிலாக குக்கே
சுப்ரமணியர் கோவில் இருந்துள்ளது.சிவ பெருமானின் புத்திரரான  சுப்ரமணியர்,
ஏராளமான தீய சக்திகளை, அரக்க அசுரர்களை அழித்து
ஆக்ரோஷத்தை தணிக்க தேர்ந்தெடுத்த மலை தான் குமர பர்வதம். சுப்ரமணியர் குமார பர்வ
தத்தை அடைந்த போது அவருடைய ஆற்றல் பொங்கி பிராவகமெடுத்திருந்தது. அப்பிரவாகத்தில்
அங்கிருக்கும் கற்களெல்லாம் குமரனாகவே ஜொலித்தது. இன்றும் கூட அங்கே கிடைக்க கூடிய
சில கற்களில் ஆறு முகம் கொண்டிருப்பதை காண முடியும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்