திருச்செந்தூரில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் சூரசம்ஹாரம் விழா!!

திருச்செந்தூரில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் சூரசம்ஹாரம் விழா!!
முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரத்துடன் நிறைவடையும் கந்த சஷ்டி விழா.

கடந்த 15 ஆம் தேதி முதல் திருத்தணி, பழனி, திருச்செந்தூர் என அனைத்து ஆறுபடை வீடுகளிலும் மற்றும் முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேங்கள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பல கோயில்களில் வெகு விமர்சையாக இன்று மாலை நடைபெறும்.

இந்நிலையில் கொரோனா காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதன்முறையாக  பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பக்தர்கள் இணைய தளங்களிலும் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலையிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்