ஆமை வளர்ப்பது நல்லதா!

ஆமை வளர்ப்பது நல்லதா!

ஆமை வளர்ப்பது நல்லதா!



 விஷ்ணு பகவானுடைய தசாவதாரத்தில் 2வது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்பது ஆமையினுடைய வடிவம்தான். ஆமை
என்பது என்னவென்றால், யாரையுமே எதிர்பார்க்காமல் தானே தனக்கு என்பது மாதிரி தன்னுடைய
பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. எல்லா விலங்குகளும் மழை பெய்தால் ஒதுங்கும், பதுங்கும். ஆனால்
இதற்கு உடம்பே கூடு. கூடே உடம்பு. திருமூலர் ஆமையை வைத்து நிறைய தத்துவங்கள்
சொல்லியிருக்கிறார். ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும். ஆமைபோல் அடங்கு என்பது
போன்று தேவாரத்தில் எல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கு. அதுபோன்ற அம்சங்களெல்லாம்
ஆமைக்கு உண்டு. ஆனால், அப்படிப்பட்ட ஆமை வரும் போது அவருடைய வாழ்க்கை ஒடுங்கப் போகிறது என்று
அர்த்தம். ஒடுக்கத்தையும், அடங்கப் போவதையும், அடங்குதல் என்றால் செல்வம் அடங்கப் போகிறது என்று அர்த்தம். அதை
உணர்த்ததான் வருகிறது. அந்த இடத்தை விட்டு விலகிப் போய்விடு, உனக்கு ஆபத்து
வருகிறது. இந்த இடத்தில் இருந்தால் உனக்கு சிக்கல்கள் அதிகம். அதைத்தான் சொல்ல
வருகிறது. ஆமை என்பது என்ன, தன்னைத்தானே ஒடுங்கிக்கொள்கிறது ஒரு வடிவம்.


நந்தி
பகவானையும் இ‌ப்படி‌த்தா‌ன் சொல்வார்கள், நாக்கை நீட்டிக்கிட்டு ஏன் எல்லா
சிவாலயங்களிலும் நந்திகளை வைக்கிறார்கள். தேடல், அது தேடலுக்குரிய அடையாளம். நாக்கை
நீட்டிக்கொண்டு ஒரு 40 டிகிரி கோணத்தில் நந்தி இருப்பார். நேராக
இருப்பது போன்று புராதனக் கோயில்களை நந்திகளைப் பார்க்க முடியாது. 40 டிகிரி கோணத்தில்
இருக்கும். செவி கேட்கும் திறன், அதன்பிறகு உள்ளுக்குள் தனது சந்தேகங்களையும்
கேட்கிறார்கள். சிவன் சொல்லக்கூடிய கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய
கருத்துகள், வினாக்கள், சந்தேகங்களையும் கேட்கிறார். அதையெல்லாம் குறுப்பிடித்தான்
அதுபோன்று நந்தி சிலையை அங்கு வைத்தது. அதுபோலத்தான் ஆமையும். அது வந்து
நுழைந்தால், உனக்கு இடர்பாடு இருக்கிறது, இதற்குமேல் இந்த இடத்தில் நீ இருக்காதே, கிளம்பிவிடு என்று
சொல்ல வருவதுதான் அதன் கருத்து.


அதனால், இதையெல்லாமே கெட்ட
சகுனம் என்று எடுத்துக் கொள்வதைவிட, கெடுதல் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாகத்தான் எடுத்துக் கொள்ள
வேண்டும். பெரியவர்களெல்லாம் சொல்வதையும் தாண்டி இதுபோன்ற ஜீவ ராசிகள் நமக்கு
நிறைய விஷயங்களைச் சொல்லும். மத குரு, குல குரு இவர்களெல்லாம் சொல்ல முடியாத விஷயங்களை ஆமையும், வவ்வாலும், நாயும், பூனையும், பசுவும் நமக்குச்
சொல்லும். மற்றவர்கள் காசு கொடுத்தால் சொல்லக்கூடிய விஷயத்தை காசு கொடுக்காமலேயே
இயல்பாகவே நமக்கு உணர்த்தக்கூடியது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    64.44%
  • இல்லை
    27.81%
  • யோசிக்கலாம்
    4.33%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்