மூன்றாம் பிறை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூன்றாம் பிறை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூன்றாம் பிறை பார்ப்பதால் ஏற்படும்
நன்மைகள் என்ன தெரியுமா?



அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும்
சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல
ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில்
இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும்
போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு
நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு
நமக்குத் தூண்டும். அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை
விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற
தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம்
என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க
நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை
என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள்
எல்லாமே நீங்கக் கூடியது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்