8 மாதங்களுக்கு பிறகு சீரடி சாய் பாபா கோயில் இன்று திறக்கப்பட்டது...

8 மாதங்களுக்கு பிறகு சீரடி சாய் பாபா கோயில் இன்று திறக்கப்பட்டது...
கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வழிப்பாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக வழிப்பாட்டு தளங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல், மத வழிபாட்டு தலங்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. ஆகையால் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை சீரடியில் உள்ள சாய்பாபா கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாக பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்