கர்மவினை அகல இந்த மந்திரம் ஜெபியுங்கள்

கர்மவினை அகல இந்த மந்திரம் ஜெபியுங்கள்

கர்மவினை அகல இந்த மந்திரம் ஜெபியுங்கள்காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிக்கும் போது கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு
சொன்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதாவது நம் புலன்களை அடக்கி பார்வையை புருவ
மத்தியில் வைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.புருவ மத்தியில் என்றால் மிக லகுவாக
நம் கவனத்தை வைக்க வேண்டும். அப்போது தான் தலை பாரம் ஆகாமல் இருக்கும். இந்த
நிலையில் காயத்ரி மந்திரத்தை சொல்லுவது அதிக நன்மை அளிக்கும்.சாய் பாபா அவர்களின் வாக்குப்படி
காயத்ரி மந்திரம் அனைவருக்கும் வாழ்வில் இரண்டாம் பாகத்தில் பெரிய பலன்
அளிக்கக்கூடியது அதாவது மாணவப்பருவதில் இதன் பலன் அதிகமாக இருக்கும்.இந்த மந்திரம் புத்தியை கூர்மையாக்கி
உடல் மனதை நேர்படுத்தும். பண்டைய காலங்களில் மாணவர்கள் 7 வயதிற்கு முன்பதாகவே காயத்ரி மந்த்ர தீக்ஷைக்கு அழைக்கப்படுவார்கள்.
காயத்ரி மந்திரம் " சர்வரோகநிவாரணி " 
"சர்வத்துக்க
பரிவாரணி" என்று அழைக்கப்படுகிறது.அதாவது எந்த நோயையும் காயத்ரி மந்திரம்
போக்கும், எந்த துக்கத்தையும் இந்த மந்திரம்
மாற்றும். காயத்ரி ஜெபத்தை தினந்தோறும் செய்து வந்தால் வாழ்வில் பல அற்புதங்கள்
நடக்கும். காயத்ரி ஜபம் செய்பவர்கள் வாழ்வில் எந்த தீங்கும் வராது.காயத்ரி அன்னபூரணியாக கருதப்படுகிறாள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்படும் வீட்டில் உணவிற்கு எந்த குறையும்
இருக்காது. திருமண தோஷம் இருப்பவர்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் அந்த தோஷம்
நீங்கும்.

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்