கோவில்களில் நாகர் சிலைகள் குவிந்திருப்பது ஏன் தெரியுமா?

கோவில்களில் நாகர் சிலைகள் குவிந்திருப்பது ஏன் தெரியுமா?

கோவில்களில்
நாகர் சிலைகள் குவிந்திருப்பது ஏன் தெரியுமா?



நாகர்
கல் சிலைகளை தோஷ பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பரிகார
பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் யாரும் நாகர் சிலைகளை எடுத்து செல்வது இல்லை. அவற்றை
கோவிலிலேயே விட்டு சென்றுவிடுவார்கள். இதனால் நாகராஜா ஆலயத்தில் நாகர் சிலைகள்
ஆயிரக்கணக்கில் சேர்ந்துவிட்டன. பொதுவாக ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை
செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர்
நீக்கிவிடுவதாக ஐதீகம். அதாவது தோஷங்கள் அனைத்தையும் நாகர் தன் வசம்
இழுத்துக்கொள்கிறார். இதனால் பக்தர்கள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.



அதே
சமயத்தில் தோஷ பரிகாரத்துக்காக பயன்படுத்தப்படும் நாகர் சிலைகளும் ஒன்றும்
இல்லாததாக மாறி விடுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பரிகார பூஜை முடிந்த பிறகு
நாகர் சிலைகளில் எந்த சக்தியும் இருப்பதில்லை. என்றாலும் அது வழிபடபட்ட ரூபம்
என்பதால் அதற்கென்று தனி மகத்துவம் நீடிக்கிறது. எனவே தான் அவற்றை கோவிலின்
முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.



நாகராஜா
ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள அரசமரத்தடி பகுதியிலும் ஏராளமான நாகர் சிலைகள்
நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வதன் மூலம்
பக்தர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கிறது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்