ராகு கேது தோஷம் நீக்கும் கோவில்

ராகு கேது தோஷம் நீக்கும் கோவில்

ராகு கேது தோஷம் நீக்கும் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில்
அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி
கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம்,
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக  அருள்மிகு சங்கரநாராயணன் கோவில்  திகழ்கிறது. 
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை
கி.பி.1022 ( கோவிலமைப்பு ).சோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள்
அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள்
அமைந்திருக்கிறது.ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி.
சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது.
சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக்
கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும்
அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி,
இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம்
வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்)
காட்சியளித்தார்கள்.கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும்
தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும்
திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும்
இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள்
அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம்,
பயத்தைப் போக்கலாம்.

இங்கு உள்ள புற்று மண்
மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில்

திருநீராக எண்ணி
பக்தியுடன் பக்தர்கள் இட்டுக் கொள்வார்கள்.

 

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்