புத்தர் கூறும் பொன்மொழிகள்

புத்தர் கூறும் பொன்மொழிகள்

புத்தர் கூறும் பொன்மொழிகள்தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்


வெல்ல வேண்டும்.
பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை


அன்பினால் வெல்ல
வேண்டும். இவையே பண்புடையோரின்


நெறிமுறையாகும்.


* பிறர் விஷயங்களில்
மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய


குறைகளையே
காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்


குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய
குறைகளை திருத்த


முடியாமல்
தவிப்பார்கள்.


* உண்மையில் ஆனந்தம்
என்பது எது தெரியுமா? உங்களால்


இயன்ற நல்ல செயல்களை
செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்


கொள்ளுங்கள். அதன்
மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க


மாட்டீர்கள்.


* மனிதன்
பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த


செயலைத் திரும்ப
திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.


ஆதலால், பாவம் தரும்
செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.


இல்லாவிட்டால், பழக்கத்தினால்
மீண்டும் மீண்டும் செய்ய


ஆரம்பித்து
விடுவீர்கள்.


* துன்பப்பட்டவனுக்கே
இன்பத்தின் அருமையை உணர முடியும்.


எவ்வித முயற்சியும்
இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்


காணாமல் போய்விடும்.
பொறாமை, பேராசை மற்றும்
கெட்ட எண்ணம்


உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும்
நல்லவனாகி விட


முடியாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்