அன்னதானம் பற்றி வள்ளலார் கூறியவை

அன்னதானம் பற்றி வள்ளலார் கூறியவை

அன்னதானம்
பற்றி வள்ளலார் கூறியவைஅன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம்
செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும்
கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும். அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள்
அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது.
விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது. பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால
சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும்
சிறுதீங்கும் உண்டாகாது. பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும்.
உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம்
தழைக்கத் துவங்கும். பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி
எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப்
பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம். பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய
நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு
விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

 

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்