முதலில் குல தெய்வத்தை வணங்குங்கள்

முதலில் குல தெய்வத்தை வணங்குங்கள்

முதலில் குல
தெய்வத்தை வணங்குங்கள்குடும்ப
வாழ்க்கையில் சோதனை சந்திப்பவர்களா நீங்கள் ? குலதெய்வத்தை மனதால் நினைத்தால் அந்த
கவலைகள் எல்லாம் பறந்தோடும் என்பது காலம்காலமாக பெரியோர் சொல்வது. எல்லோருக்கும்
மேலே ஒரு சக்தி இருக்கிறது என்றால், அது வேறு யாருமல்ல! அவரவர் குல
தெய்வம்தான்.


குலதெய்வத்தின்
அனுக்கிரகம் இல்லாமல் நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் நினைத்தது நடக்காது
என்பது பெரியோர் வாக்கு. எத்தனை கோவில், குளம், ஏறி இறங்கினாலும் குல தெய்வ ஆசி
வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள்.குலதெய்வம்
என்பதன் பொருளே குல விருத்திக்கான கடவுள் என்பதுதான். செல்வம் செழிக்க வேண்டும், நினைத்த காரியம் நடக்க வேண்டும், என எதுவாக இருந்தாலும் முதலில் குல
தெய்வத்தை வணங்கி விட்டு காரியத்தை தொடங்க வேண்டும் என்று காஞ்சிப் பெரியவரே
சொல்லி இருக்கிறார். "முதலில்
வணங்க வேண்டியது குலதெய்வம். அடுத்தது நீங்கள் நினைக்கும் இஷ்ட தெய்வம். இதன்
பிறகு நீங்கள் குடியிருக்கும் கிராமத்து அல்லது ஊர் தெய்வம்" என்கிறார் அவர்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்