உங்கள் வீட்டின் இருள் நீங்க வேண்டுமா? இதை செய்யுங்க…

உங்கள் வீட்டின் இருள் நீங்க வேண்டுமா? இதை செய்யுங்க…

உங்கள் வீட்டின்
இருள் நீங்க வேண்டுமா? இதை செய்யுங்க…முதலில் வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபத்தை
போட்டுவிடுங்கள். அதன்பின்பு பூஜை அறையை அலங்காரம் செய்து வாசனை உள்ள பூக்களை
போட்டு, முடிந்தவரை
ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்தாலும் போதும்.ஒரு சொம்பில், கொஞ்சம்
தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் 2, கிராம்பு 2, பச்சைக் கற்பூரம் ஒரு துண்டு, பன்னீர் நான்கு சொட்டு, விரலி மஞ்சள், சோம்பு, கொஞ்சம் கற்பூரவள்ளி இலை, கொஞ்சம் மருதாணி இலை, துளசி இலை, நன்னாரி தூள் ஒரு ஸ்பூன், இவைகள் அனைத்தையும், ஒன்றாக போட்டுக்கொள்ள வேண்டும்.
மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், இதில் எது உங்கள் வீட்டில்
இருக்கின்றதோ அதை, அந்த
தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள்.காலை நேரத்திலேயே இந்த தண்ணீரை தயார் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில்
வைத்து விடுங்கள். மாலை நேரம் வரை இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் நன்றாக
ஊறிய உடன், மா இலையை
வைத்தோ அல்லது வெற்றிலையை வைத்தோ, அந்தத் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டாலே போதும். கூடவே, உங்கள் வீட்டின் உறுப்பினர்களது
தலையில் இந்த தீர்த்த தண்ணீர் தெளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் இருள்நீங்கி
மகாலட்சுமி மீண்டும் வாசம் செய்வாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.உங்கள் வீட்டில் இருள் சூழ்ந்து பிரச்சினை வரப்போகிறது என்று உங்கள் உள்
மனது சொல்லும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த தண்ணீரை தெளித்து விட்டால், வரக்கூடிய பெரிய கஷ்டங்களில் இருந்து
கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளலாம்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்