கடலில் இருந்து எடுக்கப்படும் சங்கிற்கு உள்ள முக்கியத்துவம் தெரியுமா?

கடலில் இருந்து எடுக்கப்படும் சங்கிற்கு உள்ள முக்கியத்துவம் தெரியுமா?

கடலில் இருந்து
எடுக்கப்படும் சங்கிற்கு உள்ள முக்கியத்துவம் தெரியுமா?கடலின் ஆழத்தில் கண்டெடுக்கப்ப்படும் சங்குகளுக்கு வேதத்தில் மிக முக்கிய
இடமுண்டு. குறிப்பாக இந்து மதத்தில் சங்கு என்பது மஹா விஷ்ணுவின் குறியீடாக
பார்க்கப்படுகிறது. சங்கிலிருந்து எழக்கூடிய நாதம் எதிர்மறை அதிர்வுகளை
அழித்தொழிக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. இந்து புராணங்களில், மஹா விஷ்ணு அவருடைய பல்வேறு அவதாரங்களில்
சங்கினை பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஏராளம் உண்டு. அச்சங்கின் வழியே அவர்
எழுப்பும் தேவ நாதத்தின் மூலம் உலகினை சுற்றியிருக்கும் எதிர்மறை எண்ணங்களை
அழிக்கிறார் என்பதை புராணங்கள் அழுத்தமாக பதிவு செய்கின்றன.புனித வேதத்தின் படி சங்குகளுக்கு இரண்டு பயன்பாடுகள் உண்டு ஒன்று சங்கின்
ஒலியெழுப்புதல், மற்றொன்று
வழிபாட்டுக்கு உட்படுத்துதல். யாரொருவர் சங்கினை தினசரி ஊதுகிறாரோ அவருக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என
மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. அதன் நேர்மறை நன்மைகளை கருதி மக்கள் அதனை
வீட்டில் வைத்து கொள்கின்றனர். ஆனால் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்
படி அதனை மதிப்புற வைத்திருக்கிறார்களா என்பதே இங்கெழும் கேள்வி.சங்கினை வீடுகள்
தோறும் வைக்கிற போது அது வீட்டில் இருக்கும் நபர்களால் வழிபட படவும் வேண்டும் அதே
வேளையில் அவை காலை மாலை என இரு வேளைகளிலும் ஊதப்பட வேண்டும். சங்கினை வீட்டில்
வைத்திருப்பதற்கு பின் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய வாஸ்து குறிப்புகள்சங்கினை வீட்டில் வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பிவிட்டால் இரண்டு
சங்கினை வைத்தல் நலம். குறிப்பாக அவற்றை தனித்தனியாக வைக்க வேண்டும். ஊதுவதற்காக
பயன்படுத்தப்படும் சங்கினில் எக்காரணம் கொண்டும் தண்ணீர் ஊற்றி வைக்கவோ அல்லது வேத
மந்திரங்கள் முழங்கவோ பயன்படுத்தக்கூடாது. அவற்றை மஞ்சள் ஆடையில் சுற்றிவைக்க
வேண்டும். வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்ட சங்கினை புனிதமான கங்கா தீர்த்தத்தால்
சுத்திகரிப்பு செய்து அதனை தூய வெள்ளை ஆடையில் பராமரிக்க வேண்டும். வழிபாட்டுக்கு
பயன்படுத்தப்படும் சங்கு எப்போதுமே ஊதப்படும் சங்கிற்கு உயர்வான இடத்தில்
வைத்திருக்க வேண்டும்.ஒரே பயன்பாட்டிற்காக இரண்டு சங்குகளை ( அது வழிபாட்டுக்காக இருந்தாலும் சரி
ஊதுவதற்காக இருந்தாலும் சரி ) ஒரே வழிபாட்டு இடத்தில் அல்லது பூஜை அறையில்
வைத்திருக்க கூடாது. மத சடங்குகளை செய்கிற போது எக்காரணம் கொண்டு சிவலிங்கத்தின்
மேலோ அல்லது சிவ பீடத்திலோ படுமாறு சங்கினை வைக்க கூடாது இறுதியாக எந்தவொரு
காரணத்திற்காகவும் சிவலிங்கத்திற்கோ அல்லது சூரியனுக்கோ சங்கின் மூலம் நீர் வார்க்க
கூடாது.

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்