கொடிமரத்தின் ரகசியம் தெரியுமா?

கொடிமரத்தின் ரகசியம் தெரியுமா?

கொடிமரத்தின் ரகசியம் தெரியுமா?கோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது. அதில் புராணங்களில்
குறிப்பிட்டுள்ளபடி, தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால்
அமைக்கப்படுகிறது. இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில்”துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது.கோவில் கோபுரத்திற்கும் சந்நிதானத்திற்கும் இடையே 13 மீட்டர் இடைவெளி விட்டு
கொடி மரம் அமைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடும். சிவன் கோவில்களில்
உள்ள கொடிமரம், நந்தி மூலவரை நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. கொடி
மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும் சதுரமாகவும் இருக்கும். கொடிமரம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான்
இவர்களின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.கொடி மரம் ராஜகோபுரத்தை விட உயரம் குறைவாக இருக்கும். அதே
நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். கொடிமரத்தில்
மேலே உள்ள உலோக தகடுகள் இடி மின்னல் தாக்குதலில் இருந்து ஆலயத்தை பாதுகாக்கும்.ஒரு ஆலயத்தையும் முழுமை அடைய செய்வது அந்த ஆலயத்தில் உள்ள
கொடிமரம் தான். கடவுளை காண முடியாவிட்டாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொடி
மரத்தை வணங்குவது அவசியம். கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க
நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல்
வேண்டும்.கொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்