காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்??

ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து கண் திறந்து முதன் முதலில் காணும் பொருட்கள் மங்களகரமாக இருப்பின், அன்றைய நாள் முழுவதும் நல்லதே நடக்கும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்க கூடாது என்றும் உள்ளங்கைகளை பார்ப்பது தான் நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏனெனில் உள்ளங்கைகளின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் மற்றும் அடிப்பிக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை பார்த்து
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே சரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
என்ற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். இதனை சொல்வதன் மூலம் அந்த நாள் முழுவதும் நல்லதே நடக்கும்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு