ஏன் அனைத்து வீட்டுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுகின்றனர் தெரியுமா??

ஏன் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுகின்றனர் தெரியுமா??
உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவதன் மூலம் அவர்களுக்கு  காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனை தொடர்ந்து
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான். ஏனெனில் அதில் காமாட்சி அம்மனும், அவர்களது குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்று நம்பப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்