வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். அதுமட்டுமின்றி வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
மேலும், வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். ஆகையால் பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
இதனை தொடர்ந்து நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தர வேண்டும். பின் மஞ்சள் குங்குமம் தர வேண்டும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.