தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி என்ற ஊரில் உள்ள குமாரக்கோயில் கருவரை தனிச்சிறப்புப் பெற்றது.
கருவறையின் தெற்கு - வடக்குப் பகுதிகளில் இரண்டு சந்நதிகள். தென்பகுதி சந்நிதியில் குமரப் பெருமான் வள்ளி, தெய்வானையுடனும், வடக்குப்பகுதி சந்நிதியில் அம்மை, அப்பன் உடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீர்கின்றனவாம். குழந்தைப்பேறு கிட்டுகிறதாம். இங்கு குமரனுக்கு தோசை, அப்பம், வடை நிவேதனம் செய்யப்படுகிறது.