ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்!
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்!

ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய பிள்ளையார் சிலை, கோவை புளியங்குளத்தில் தான் உள்ளது. இந்தச் சிலையின் உயரம் 19 அடி, அகலம் 111/2 அடி. சூரிய காந்தக் கல்லில் செய்யப்பட்ட சிலை இது என்பது சிறப்பு!. 'தேவேந்திரப் பிள்ளையார்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.
         கோவை புளியங்குள பிள்ளையார், சூரிய காந்தக் கல்லைக் கொண்டு, கைதேர்ந்த 10 சிற்பிகளைக் கொண்டு, சுமார் 190 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளார். துதிக்கை வலப்புறமாக இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் இவருக்கு நெற்றிக்கண் இருப்பதால் 'முக்கண் பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார்.
       குண்டலினி சக்தியின் அடையாளமாக இவர் வயிற்றைச் சுற்றி பெரிய பாம்பு (நாக அணி) உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்தப் பிள்ளையாரை வழிபட்டு சென்றால், அவர்களின் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். வலக்காலை ஊன்றி இடக்காலை நீட்டி, அமர்ந்த கோலத்தில் உள்ளார் இவர்.
      கோவை நகரின் மதியில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள விநாயகரை, புதிதாக தொழில் தொடங்குபவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்கள் வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com