சில காலம் கழித்து, பத்திரிகையொன்றில் திருமீயச்சூர் லலிதாம்பிகை பற்றிய தகவலைப் படித்து, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு விரைந்திருக்கிறார். பார்த்தால், அவருடைய கனவில் வந்த அதே வடிவில் அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்திருக்கிறாள் அம்பிகை! தனது கனவில் வந்த அம்பிகை கொலுசு கேட்ட விவரத்தை அங்கிருந்த சிவாச்சாரியாரிடம் சொல்லி, தான் வாங்கி சென்ற தங்க கொலுசை கொடுக்க, சிவாச்சாரியாரோ கொலுசு அணிவிக்கும் விதத்தில் அம்பிகை பாதத்தில் சுற்றுவெளியோ இடுக்கோ இல்லை என்றாராம். பக்தை 'எதற்கும் முயன்று பாருங்கள்' என்று சொல்ல, கொலுசை எடுத்து அணிவிக்க முயன்ற சிவாச்சாரியார் ஆச்சர்யமடைந்திருக்கிறார். ஆம்! லலிதாம்பிகையின் பாதங்களில் கால் கொலுசு அணிவிக்கும் விதத்தில், பாதங்களைச் சுற்றி சிறிது இடைவெளி இருந்திருக்கிறது. பிறகென்ன... கொலுசை அணிந்துக் கொண்டு முத்துக்கள் சிணுங்க அம்பிகை அமர்ந்து, பக்தையின் ஆராதனையை ஏற்றிருக்கிறாள்! அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.