விபூதியும் ருத்ராட்சமும் எப்போது அணியலாம்?

விபூதியும் ருத்ராட்சமும் எப்போது அணியலாம்?
ஸ்த்ரீ மகிமை தந்திரத்தில் உள்ள விதிப்படி 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை 'சுவாசினி' என்று அழைக்கிறோம். ஆசாபாசங்களை நிறைவு செய்து, பேரன் பேத்திகளோடு அமர்ந்தபடி தெய்வ சிந்தனையில் திளைக்கும் காலம் இது. அதே போல சைவ அனுட்டான விதிகளில் சிவபஞ்சாட்சர மந்திரம் எடுத்துக்கொண்டு சிவதீட்சை பெறுதல் என்ற விதி இருக்கிறது.
 சுவாசினிப் பருவம் வந்த பிறகுதான் சிவதீட்சையைப் பற்றி பெண்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், சில பெண்கள், தங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது கணவனிடம் ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்டவை காரணமாக அதற்கு முந்தைய வயதுகளிலேயே ருத்ராட்சம் அணிந்து, விபூதி தரித்துக் கொண்டு சில அங்கக் கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார்கள். ஆனால், இது தேவையற்ற விஷயம்!
கோபத்தின் உச்சத்திற்கு போய்விட்ட பெண்கள் கணவன் மீது வெறுப்படைவதால், தாலியைக் கழற்றி கோயில் உண்டியலில் போடுவது,ஆற்றில் வீசுவது என்று இவையெல்லாம் செய்தல் கூடாது. இளம் வயதுப் பெண்கள், தேவையற்ற உணர்ச்சிவயப்படலுக்கு ஆளாகாமல், இல்லற தர்மத்தில் ஈடுபடுவது உத்தமம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்