ஏழை அந்தணர் பணம் படைத்தவர் ஆன கதை

ஏழை அந்தணர் பணம் படைத்தவர் ஆன கதை
காசி நகரில் வாழ்ந்து வந்தார் அந்தணர் ஒருவர். ஏழ்மையில் உழன்று மிகவும் துன்பப்பட்ட அந்தணர், தினமும் வெளியில் சென்று பிஷையாக அரிசி பெறுகிறார். 

அவர் வீட்டுக்கு எடுத்து வரும் அரிசியை மனைவி சமைத்து, அவருக்கும் பிள்ளைகளுக்குமாக ஒரு வேளை உணவு படைக்கிறாள். 

தினமும் அவர்களின் வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்கிறது,  ஒரு நாள் அந்தணர், அரிசி கிடைக்காமல் பசி தாகத்துடன் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். 

அப்போது வயதான பெரியவர் அவர் முன்பாகத் தோன்றி, "சத்யநாராயண பூஜை" மகிமை பற்றி சொல்கிறார். விரதமிருக்கும் வழிமுறையையும் சொல்லித் தருகிறார். 

அப்படி அந்தணர் முன்பு தோன்றியது சாட்சாத் ஸ்ரீ விஷ்ணுவேதான்! வயதானவர் சொன்ன ஆலோசனையை கேட்கும் அந்தணர், ஸ்ரீ சத்ய நாராயணனை துதித்து, தான் 'சத்யநாராயண பூஜை' செய்வதாக வேண்டிக்கொள்கிறார். 

அன்று, அவருக்கு தேவைக்கு மேல் அரசி கிடைக்கிறது! 
அன்று அரிசியை மனைவியிடம் தரும் அந்தணர், தான் சந்தித்த வயதானவர் ஆலோசனையை பற்றியும் சத்தியநாராயண பூஜை மகிமையைப் பற்றியும் சொல்கிறார். 

அதன்படி அவரும் மனைவி குழந்தைகளும், உறவினர், சுற்றம் சூழ சத்யநாராயண பூஜையை மேற்கொள்கிறார்கள். அந்தணர் ஏழ்மையிலிருந்து விடுபடுகிறார். தனது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது சத்யநாராயண பூஜையை செய்து, பெரும் செல்வந்தராக தனது வாரிசுகளுக்கு பெரும் சொத்தை வைத்துவிட்டு இருக்கிறார். 

இந்த கதையானது கதாகலாட்சேபமாக, ஸ்ரீ வீரவெங்கட சத்யநாராயண சுவாமி கோயிலில், திருவிழாக் காலங்களில் சொல்லப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்