மூன்று கொடிமரங்கள்!

மூன்று கொடிமரங்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வராஹ நதிக்கரையில் அமைந்துள்ளது ராஜேந்திர சோழிஸ்வரர் திருக்கோயில். மூலவர் ராஜேந்திர சோழிஸ்வரர். அம்பாள் அறம்வளர்த்த நாயகி. 

ஆனால் இதை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் என்றுதான் அழைக்கிறார்கள். இத்தலத்தில் ஆண் மருத மரமும் பெண் மருத மரமும் வராஹ நதியில் ஆலயத்திற்கு  எதிர் எதிராக தலமரமாக அமைந்திருப்பது சிறப்பு. 

இப்படியான அமைப்பு காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டுமே உள்ளதாம். எனவே வராஹ நதியை கங்கைக்கு நிகரானதாகவும், இத்தலத்தை காசிக்கு ஒப்பானதாகவும் போற்றுகின்றனர். 

மேலும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,  இத்திருக்கோயிலில் மூன்று கோடி மரங்கள் அமைந்துள்ளன. பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வராஹ நதியில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்