சிவபெருமானுக்கு பிரண்டை அன்னம் நிவேதித்து எமன் வழிபட்ட ஸ்தலம்!

சிவபெருமானுக்கு பிரண்டை அன்னம் நிவேதித்து எமன் வழிபட்ட ஸ்தலம்!
சிவபக்தர்களான மிருகண்டரிஷி - மருத வதி  தம்பதிக்கு வெகு காலமாக குழந்தையில்லை. சிவபெருமானின் ஆசியால் பதினாறு வயது மட்டுமே  வாழக்கூடிய 'மார்க்கண்டேயன்' எனும் மகனை பெறுகின்றனர். 

மார்க்கண்டேயன் சிறுவயதிலிருந்தே சிவபக்தனாக வளர்ந்தான். பதினாறு அகவை முடியும் தருணத்தில் யமன் அவனுடைய உயிரை எடுக்க வர, சிவபூஜையில் ஈடுபட்டிருந்த மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிப்பிடிக்க, யமன் அவனை நோக்கி வீசுகிற பாசக்கயிறு சிவலிங்கத்தைச் சுற்ற, கடும்கோபத்துடன் காட்சியளிக்கும் சிவபெருமான், "என்னுடைய பக்தனையா பாசக் கயிற்றால் இழுக்கிறாய்" என்று யமதர்மனை உதைக்க, எமன் உயிர் துறக்கிறான். 

சிவபெருமான், மார்க்கண்டேயனுக்கு, அவனுடைய வயது பதினாறை தாண்டாத வரத்தை வழங்குகிறார்!

யமதர்மராஜன் இறந்ததால், உலகில் சாவு இல்லாத நிலை ஏற்பட்டு, உயிர்கள் பல்கிப் பெருகின! தேவர்கள் சென்று சிவபெருமானிடம் முறையிட, மீண்டும் யமதர்மனை உயிர்ப்பிக்கறார் சிவபெருமான். "இனி என்னுடைய பக்தர்களை யமலோகம் கொண்டு செல்லாமல், நேராக கைலாயம் அனுப்பிவிட வேண்டும்" என்று கட்டளையிடுகிறார் சிவபெருமான். (சிவபக்தர்கள் இறந்தால் அவர்களின் வலது காதில்
 சிவபெருமானே நமச்சிவாய மந்திரத்தை ஓதி, கைலாயம் அனுப்புவதாக ஐதிகம்)
உயிர்மீண்ட யமதர்மன், திருமீயச்சூர் ஸ்தலம் வந்து, நூறு சங்குகள் கொண்டு மேகநாதரை அர்ச்சித்து, தாமரை இலையில் பிரண்டை சாதம் வைத்து நைவேத்தியம் செய்து, தனது தவற்றை மன்னிக்குமாறு வழிபட்டு, யமலோகம் திரும்பினாராம்!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்