முட்டறுக்கல்

முட்டறுக்கல்
பகவதிக்கு தேங்காய் உடைத்து வழிபடுவதே இந்த வழிபாடு. மனிதர்களுக்கு வரும் முட்டுக்கட்டைகளை... அதாவது, கஷ்டம், நஷ்டம், தடைகளை உடைப்பதே 'முட்டாக்கல்'  வழிபாடு. 
முட்டறுக்கலின் போது, பகவதி முன்பாக தேங்காய் உடைக்கும் வழிபாடு நடைபெறுகிறது. தேங்காய் உடைபடுவதை வைத்தே பிரார்த்தனையின் நிலை என்ன என்பதை நம்பூதிரி சொல்லி விடுகிறார். தேங்காயில் பூ இருந்தால் பிராத்தனை நிறைவேறும், தொட்டில் காயாக இருந்தால் குழந்தை பிறக்கும், தேங்காய் சரி சமமாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றெல்லாம் சொல்லிவிடுகிறார். ஒருவேளை, தேங்காய் அழகியோ அல்லது நெடுக்காக உடைந்தாலே காரியத் தடை என்பது உள்ளிட்ட விஷயங்களையும் சொல்லிவிடுவாராம். உடைத்த தேங்காயின் இரு மூடிகளையுமே பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். 
முட்டறுக்கலில், பகவதி சாதகமாக உத்தரவு கொடுத்துவிட்டால், உடனே இனிப்புப் பாயசம் செய்து நிவேதிக்கிறார்கள். பிரசாதமாக உட்கொள்கிறார்கள். முட்டறுக்கலில் காரிய பலிதம் பற்றிய பகவதியின் உத்தரவை உடனே தெரிந்து கொண்டு விடலாம் என்பதால், அதற்காகவே இங்கு வரும் பக்தர்கள் அதிகம். சில சமயங்களில், நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 முட்டறுக்கல் வரை கூட நடைபெறுமாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்