பிரச்னை தீர்க்கும் பிடி அரிசி!

பிரச்னை தீர்க்கும் பிடி அரிசி!
சங்கர மடத்திற்கு ஏழைப்பெண் ஒருத்தி வந்தாள். மகா பெரியவரிடம், "சுவாமி... என் கணவர் வியாதியால் சிரமப்படுகிறார். வேலைக்கு போக முடியவில்லை. மகனுக்கோ சரியான வேலை இல்லை. கல்யாண பெண் இருக்கிறாள். நிம்மதியாக தூங்க முடியவில்லை. என் கணவரின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்தேன். அவரும் பரிகாரம் சொன்னார். ஆனால் அதைச் செய்ய பணம் நிறைய தேவை. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று கூறினார்.

சுவாமிகள் கனிந்த பார்வையுடன் "இப்போது உன் வாழ்வில் காலச்சக்கரம் அதிகபட்சம் கீழே இருக்கிறது.இனி அது மேல் நோக்கித்தானே சுழலும். அப்போது எல்லா பிரச்சனையும் கடவுள் அருளால் சரியாகும். மகனுக்கு நல்ல வேலையும், மகளைத் தேடி நல்ல வரனும், உன் கணவரின் உடல் நலனும் சரியாகும், கவலைப்பட வேண்டாம். உன் கணவரை தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கச் சொல். உடல் நலம் பெறும், செல்வம் சேரும்" என்றார். மேலும் "ஜோசியர் என்ன பரிகாரம் சொன்னார்?" எனக் கேட்டார்.
"சகஸ்ர போஜனம் செய்து வைப்பது தான் பரிகாரம்" என்றார்.
சுவாமிகள், "சகஸ்ர போஜனம் என்றதுமே ஆயிரம் பேருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் உயிர்களின் பசியைத் தீர்த்தாலும் பிரச்சனை தீரும். வீட்டில் உள்ள அரிசிக் குருணை ஒருகைப்பிடி எடுத்து எறும்புப் புற்றுக்கு அருகில் போடு. ஆயிரம் எறும்புகள் அதைச் சாப்பிடும். அதுவும் சிறந்த பரிகாரம்தான். காமாட்சி அருளால் நல்லதே நடக்கும். உனக்காக நான் பிராத்திக்கிறேன்" என்றார் பெரியவர்.

அப்படியே செய்து உயர்வு பெற்றால் அந்தப் பெண்மணி.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்