அனுமனை வழிபடும் முறைகள்....

அனுமனை வழிபடும் முறைகள்....
செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல்,  வெல்லம்,  கொய்யா பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால் அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.

ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரம் பூசிக்கொள்வதை, அனுமன் கண்டார். உடனே சீதையிடம், எதற்காக இதை பூசுகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு சீதை, "இது ராமபிரான் நீண்டகாலம் செழிப்பாக இருக்க, அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஒர் செயல் என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன், உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார். 

அனுமனை சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம். 

முக்கோண வடிவமுள்ள சிவப்பு பொடியில் "ராம" என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களில் முன் மாட்டிக்கொண்டால் விபத்துகளில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் பணம் கொழிக்கும்.

அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.

மல்லிகை எண்ணெய், மன நிலையை மேம்படுத்த உதவும். அதிலும் செந்தூர பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து அனுமனுக்கு திலகம் இடுவது இன்னும் நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்