ஹோமத்தின் பலன் சாம்பிராணியில் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஹோமத்தின் பலன் சாம்பிராணியில் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.

ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும். சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

 சாம்பிராணியில் வேப்பம் பட்டையை போட்டு தூபம் இட ஏவல் பில்லி சூனியம் ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

 சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத் தடை ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியைப் போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

சாம்பிராணியில் நன்னாரி வேர் இன் பொடியைப் போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மஹாலக்ஷ்மி வாசம் நிலைக்கும்.

சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்...

சாம்பிராணி காட்டுவது என்பது நம் தொன்றுதொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தெந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும்.

ஞாயிறு அன்று சாம்பிராணி காட்டினால் -  ஆத்ம பலன், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர் அருள் கிட்டும்.

 திங்களன்று சாம்பிராணி காட்டினால் - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

செவ்வாய் அன்று சாம்பிராணி காட்டினால் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

புதன் அன்று சாம்பிராணி காட்டினால் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

வியாழன் அன்று சாம்பிராணி காட்டினால் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடர்ந்து கிட்டும்.

வெள்ளி அன்று சாம்பிராணி காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்க பெறும்.

சனி அன்று சாம்பிராணி காட்டினால் - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.45%
 • தவறான முடிவு
  20.61%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.93%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்