கடவுளை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும்?

கடவுளை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும்?
பூமியில் இறந்த மக்கள் வரிசையாக மேல் உலகம் சென்று கொண்டிருந்தார்கள். அங்கே கடவுள் மனிதர்களை சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

"நாம சொர்க்கத்துக்கு போக போறோமா இல்ல நரகத்துக்கு போறோமா" என்று எல்லோரும் பயந்து பயந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

ஆனால் ஒரு செல்வந்தன் மட்டும் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தான்.

அவனிடம் ஒருவர்.....,
"நாங்களாம் சொர்க்கமா, நரகமானு தெரியாம பயந்துகிட்டு இருக்கிறோம். நீ மட்டும் பயமில்லாம இருக்கியே எப்படி?" என்று கேட்க,

"நான் பூமியில் வாழ்ந்த காலத்துல கடவுளுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்திருக்கேன். அதனால சொர்கத்துக்கு தான் போவேன் நம்பிக்கை இருக்கு" என்றான்.....

செல்வந்தன் கடவுளை பார்க்க வேண்டிய நேரம் வந்தது. கடவுள் அவனை பார்த்ததும்,

"இவனை நரகத்துக்கு அனுப்புங்கள்" என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"கடவுளே என்னை ஏன் நரகத்துக்கு அனுப்புறீங்க. உங்களுக்காக நிறைய கோவில் கட்டியிருக்கேன். பல கோவில்ல அபிசேகம் பண்ணியிருக்கேன். அது மட்டுமில்லாம தங்கத்தால உங்க சிலையை செய்து கோவிலுக்கு குடுத்திருக்கேன்."

"போதும் நீ பேசுறத நிறுத்து. மக்கள் பசி பட்டினியா இருக்கும் போது, அவங்களுக்கு உதவி செய்றத விட்டுட்டு கோவிலுக்கு தங்க சிலை தேவையா..?

எனக்கு பிடிச்சத செய்யணும், என்னை சந்தோச படுத்தணும்னு நினைச்சா ஏழைகளுக்கு உதவி செய்யுங்க. அதை தான் நான் உங்ககிட்ட எதிர்பாக்குறேன். வேற எதுவும் தேவையில்லை" என்றார் கடவுள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.59%
 • தவறான முடிவு
  20.54%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.88%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  7.98%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்