மகா லிங்க பைரவி கோவிலில் மாதவிடாய் காலத்திலும் பெண்கள் பூஜை செய்யலாம்...

கோயம்புத்தூரில் உள்ள "மகா லிங்க பைரவி" கோவிலுக்கு மாதவிடாய் காலத்தில்கூட பெண்களை, "பைராகினி மா" மற்றும் "உபாஷிகா" தெய்வத்தை வணங்க அனுமதிக்கிறது. 

சத்குரு ஜாகி வாசுதேவ் ஆசிரமத்தில் அமைந்துள்ள மகா லிங்க பைரவி கோவில் உள்ள கருவறைக்குள் பெண்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கிறது. அத்துடன் இந்த கோவிலில் பெண்கள் மட்டும் தான் பூஜை மற்றும் சடங்குகளை செய்கின்றனர். 

இதுகுறித்து உபாஷிகா மகா நிர்மலா கூறுகையில், "இது சத்குருவின் கருத்து. கோவிலில் பெண்கள் பூஜை மற்றும் சடங்குகளை செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது" என்று  கூறினார்.

இந்த  மகா லிங்க பைரவி கோவிலில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் வழிபாடு செய்து வருகிறார்கள். ஆனால் பெண்கள் மட்டுமே இந்த கோவிலின் உள் கருவறைக்குள் நுழைந்து தேவியை வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்கள் துறவிகள் மற்றும் பக்தர்கள் மாதவிடாய் காலத்திலும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். 

இந்து மத நம்பிக்கையில் மாதவிடாய் அழுக்காகவும் தூய்மையற்றதாகவும் கருதப்படுதால் இந்தியாவின் பல பகுதிகளில் மாதவிடாயின் போது பெண்கள் சாதாரண வாழ்க்கையில் பங்கேற்பதற்கும், பிரார்த்தனை செய்யவும், புனித நூல்களைத் தொடவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த கோயில் நடைமுறை பழைய நம்பிக்கைகளை மாற்றி யோசிக்க ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்