மகா சிவராத்திரி ஸ்பெஷல்.. மினியேச்சர் சிவலிங்கம்!

மகா சிவராத்திரி ஸ்பெஷல்.. மினியேச்சர் சிவலிங்கம்!

நாடு முழுவதும் மகா சிவராத்திரி இன்று  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

ஒடிசாவை சேர்ந்த கலைஞர் ஈஸ்வர் ராவ் என்பவர் பென்சில் முனையிலும், மிகச்சிறிய கல்லிலும் சிவலிங்கத்தை செதுக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ‘மகா சிவராத்திரி நாளையொட்டி, கல்லில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கத்தை செதுக்கியுள்ளேன். இதனை ஒரு சிறிய கண்ணாடி குடுவைக்குள் அடைத்துள்ளேன். இது நுட்பமான வேலையாகவும், சவால் நிறைந்த வேலையாகவும் இருந்தது. இதே போன்று பென்சில் முனையில் 0.5 செ.மீ அளவில் சிவலிங்கத்தை செதுக்கியுள்ளேன்’ என கூறியுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக உலகக் கோப்பை கிரிக்கெட் கேடயத்தை பென்சில் நுனியில் செதுக்கியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒரு சிறு கண்ணாடி குடுவைக்குள் தேவாலயம் ஒன்றை செதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்